சினிமா

முதன்முறையாக அஜித்தை ஆட்டி வைத்த திலீப் சுப்ராயன்

முதன்முறையாக அஜித்தை ஆட்டி வைத்த திலீப் சுப்ராயன்

webteam

அஜித்திற்காக திலீப் சுப்ராயன் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

நான்காவது முறையாக அஜித்தின் திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் சிவா. ஒரு மாதமாக நடைபெற்ற திரை உலக வேலை நிறுத்தத்தால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. நிலைமை சீரானதும் அஜித், ஹைதராபாத்தில் நடைபெற இருந்த படப்பிடிப்புக்கு கலந்து கொள்ள சென்றார். அப்போது விமானநிலையத்தில் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானது. 

இப்போது ஹைராபாத்தில் நடைபெற்று வரும் அஜித்தின் ‘விசுவாசம்’ முதற்கட்ட படப்பிடிப்பில் இருந்து அஜித்தும் நயன்தாராவும் இந்த வாரத்துடன் வெளியேறுகிறார்கள். இந்த முற்கட்ட படப்பிடிப்பு கடந்த 30-35 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் போடப்பட்ட செட்டில் அதற்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இயக்குநர் சிவா, பாடல் காட்சிகளை படமாக்கினார். மேலும் சில சண்டைக்காட்சிகளையும் படமாக்கினார். அஜித்தின் இந்தச் சண்டைக் காட்சிகளை முதன்முறையாக ஸ்டெண்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயன் வடிவமைத்துள்ளார். இந்தப் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.