சினிமா

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கர்ணன் - தனுஷ் எத்தனை நாள் ஒதுக்கியுள்ளார் தெரியுமா?

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கர்ணன் - தனுஷ் எத்தனை நாள் ஒதுக்கியுள்ளார் தெரியுமா?

sharpana

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு வரும் 25 ஆம் தேதிமுதல் துவங்கவுள்ளது.

’பரியேறும் பெருமாள்’ பட வெற்றி, மாரி செல்வராஜிற்கு நடிகர் தனூஷை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. இருவரும் இணைந்தது மட்டுமல்ல, ’கர்ணன்’ என்ற தலைப்பும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது.

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான, மகாபாரதத்தில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக கர்ணன் தொடுக்கும் கேள்விக் கணைகளே அர்ஜுனனின் அம்பு வலிமையைவிட ஆயிரம் மடங்கு உறுதியானது. சமீபத்தில்தான் நடிகர் தனுஷின் 37 வது பிறந்த நாளையொட்டி ‘கர்ணன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு.

இந்நிலையில், தனுஷ் பாலிவுட்டில் நடித்துவரும் அட்ராங்கி ரே படத்தின் ஷுட்டிங் கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி முதல் தனுஷ் கர்ணன் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். இறுதிக்கட்டப் படப்பிடிப்புகளுக்காக 5 நாட்கள் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரியோறும் பெருமாள் படத்தில் நடித்துள்ள பூ ராமு, யோகிபாபு உள்ளிட்டோரும் கர்ணன் படத்தில் நடித்துள்ளனர்.