அடுத்த திரைப்படத்தை இயக்க, அவசரப்படவில்லை என நடிகரும், இயக்குநருமான தனுஷ் கூறியுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தநிலையில், அவர் பேசுகையில், ‘ப.பாண்டி படத்தின் முன்னோட்டமாக நான் 14 குறும்படங்களை இயக்கி பயிற்சி பெற்றேன். ப.பாண்டி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் எனக்கு திட்டமிருக்கிறது. நான் நடிக்க இருக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது’ என அவர் தெரிவித்தார்.