சினிமா

தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" : மே மாதம் முதல் படப்பிடிப்பு!

தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" : மே மாதம் முதல் படப்பிடிப்பு!

jagadeesh

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் "நானே வருவேன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது. செல்வராகவன் - தனுஷ் சகோதரர்கள் இருவரும் "மயக்கம் என்ன" படத்திற்கு அடுத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்து முடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.