தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் விஐபி 2 படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தனுஷ்- அமலா பால் நடிப்பில் சவுந்தர்யா ரஜினி இயக்கும் படம் விஐபி-2. வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் தயாராகி இருக்கிறது. இந்தப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு ரீ-எண்ட்ரி கொடுக்கும் கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தனுஷ் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படம் ஆகஸ்ட் மாதம் ரீலிஸ் ஆகும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் இம்மாததே வெளியாகும் என காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்த மாதம் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.