சினிமா

யூடியூபில் 5 மில்லியன் லைக்ஸ்: ’ரெளடி பேபி’ பாடல் புதிய சாதனை

sharpana

தனுஷ்-சாய் பல்லவியின் ‘ரெளடி பேபி’ பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். தனுஷ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் ‘ரெளடி பேபி’ பாடல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க வைரல் ஹிட் அடித்தது. கிரீஸில் படமாக்கப்பட்ட ’ரெளடி பேபி’ பாடலுக்கு ஜானி மாஸ்டர், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் நடனம் அமைத்திருந்தனர். தனுஷ் நன்கு நடனம் ஆடுபவர். அதேபோல, நடிகை சாய் பல்லவியும் நல்ல டான்ஸ் மாஸ்டர். இருவரும் சேர்ந்து நடனம் ஆடியதால், அந்தப் பாடல் செம ஹிட் அடித்தது. நடனம் மட்டுமில்லாமல் தனுஷின் குரலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ குரலும் குதூகலிக்க வைத்தது.

இவை எல்லாவற்றையும் விட யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் ரீப்பீட் மோடில் கேட்கவைத்தது. ஏற்கனவே, ‘ரெளடி பேபி’ பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ள முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்ற நிலையில், தற்போது யூடியூபில் 5 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்து தென்னிந்தியாவில் 5 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்த முதல் பாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.