தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் ஜூன் 1 ஆம் தேதி வெளியாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த பிப்ரவரி 22 ஆம் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி கவனம் ஈர்ததது. படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாவதால், ஜூன் 1 ஆம் தேதி ட்ரைலர் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியானாலும் அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. முதன்முறையாக ஜகமே தந்திரம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.