ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் கென் ஸ்காட் இயக்கும் திரைப்படம்‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர்’. இதில் நடிகர் தனுஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு வெகுநாட்களாக கிடப்பில் கிடந்தது. அது வெளியாகுமா? அல்லது நிறுத்தப்படுமா என செய்திகள் வட்டம் போட்டன. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு வேகம் எடுத்தன.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இப்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தப் படம் பெஸ்ட் செல்லர் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் மும்பைவாசியாக நடித்துள்ளார். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான காலாச்சார பின்புலத்திலுள்ள தனுஷுடன் பணிபுரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது என இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எடுத்த காட்சிகள் வெவ்வேறு விதமான நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், லிபியா, இங்கிலாந்த் என பல நாடுகளில் இப்படம் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசர் ஒரு இந்திய உணர்வை கொடுக்கும் தன்மையில் அமைந்துள்ளது. குறிப்பாக அதில் அந்நிய தன்மை அரவே இல்லை. வெளியான வேகத்தில் ஒரு மில்லியனை எட்டி உள்ளது டீசர்.