‘மாரி 3’வெளியாக வாய்ப்பு உள்ளதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கி வரும் திரைப்படம் ‘மாரி2’. இதன் முதல் பாகம் 2015ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் தனுஷ் ஏற்றிருந்த கதாப்பாத்திரம் பரவலாக பேசப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை ‘செஞ்சுடுவேன்’ என பஞ்ச் டயலாக் பேசும் அளவுக்கு மிக பிரபலமானது. ஆகவேதான் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்தது படக்குழு. முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். அப்படத்தின் தீம் மியூசிக் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் ‘மாரி’யில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். ‘மாரி2’வின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இந்தக் கதாப்பாத்திரத்தை நான் விரும்பி நடித்தேன். படக்குழுவிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அதே போல பாலாஜி மோகன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ‘மாரி’யின் அடையாளமான மீசையை கத்திரியால் வெட்டுவதை போல வெளியிட்டுள்ளார். பாலாஜி தன் ட்விட்டரில், “படப்பிடிப்பு மிக குறும்பாக இருந்தது. தனுஷின் கேரக்டரை மீண்டும் திரையில் பார்க்க அருமையாக இருந்தது. இவர்களை தவறவிடுகிறேன். மீண்டும் அடுத்த முறை சந்திப்போம்”எனக் கூறியிருக்கிறார். ஆகவே ‘மாரி3’ கட்டாயம் வெளியாகும் எனத் தெரிகிறது.