கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப் போனது. இதனால், ஜகமே தந்திரம் ஓடிடியிலா/தியேட்டரிலா என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தேதியை வெளியிடவில்லை.
இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ வரும் ஜுன் 18 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.