anirudh - dhanush anirudh - dhanush
சினிமா

நன்றி குறிப்பில் ‘தனுஷ்’ பெயர் இல்லை.. ரசிகர்கள் வேதனை! DNA கூட்டணிக்கு என்னாச்சு?

சினிமா துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு இசையமைப்பாளர் அனிருத் நன்றி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனிருத்தை திரையுலகிற்கு அறிமுகம் செய்த தனுஷுக்காக ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

Rishan Vengai

அனிருத்தின் 15 ஆண்டுகள் இசைப்பயண நன்றி குறிப்பில் தனுஷ் பெயர் இல்லாதது ரசிகர்களை வருத்தமளிக்கிறது. '3' படத்தின் மூலம் அனிருத்தை அறிமுகப்படுத்திய தனுஷின் பங்கு மறைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. DnA கூட்டணிக்கு என்னாச்சு என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர்.

தமிழ் சினிமாவை கடந்து இந்தியா சினிமாவே விரும்பும் இசையமைப்பாளராக மாறியிருக்கிறார் அனிருத் ரவிச்சந்தர். ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மூலம் ஒரு ஆயிரம் கோடி படமும், லியோ, ஜெயிலர், ஜெயிலர் 2 என மூன்று 500 கோடி படங்களும் கொடுத்திருக்கும் அனிருத் இசைத்துறையில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ளார். அனிருத்தின் துள்ளலான இசை, ட்ரெண்ட் செட்டிங் மியூசிக் அனைத்தும் ஜென்சியினரை கவர்ந்துவருகிறது.

Anirudh

அவரின் இந்த இசைப்பயணம் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ’3’ படம் மூலம் தொடங்கியது. 2011ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அவருடைய இசையில் வெளிவந்த ‘ Why This Kolaveri Di’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்து இந்திய அளவில் ட்ரெண்ட்டானது. அந்த ஒரு பாடலில் இந்திய அளவில் புகழை சம்பாதித்த நிலையில், அனிருத்தின் முதல் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்பார்ப்புக்கு சற்றும் குறைவில்லாத வகையில் ‘3’ படத்தின் அனைத்து பாடல்களையும் ஹிட் பாடல்களாக கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு தீணிப்போட்டிருந்தார் அனிருத்.

தனுஷின் 3 படம் மூலம் தொடங்கிய அவருடைய பயணம் அடுத்தடுத்து விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பவன் கல்யாண், ஜூனியர் NTR, நானி, ஷாருக் கான் வரை இந்திய சினிமாவின் அனைத்து துறையிலும் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.

dhanush - anirudh

இந்தசூழலில் அனிருத்தின் இசைப்பயணம் 15 ஆண்டுகளை கடந்ததற்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் அனிருத் ரவிச்சந்தர். ஆனால் அந்த பதிவில் ஒரு இடத்தில் கூட தனுஷ் பெயர் இல்லாதது வருத்தமளிப்பதாக தனுஷ் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வருத்தத்தை பதிவுசெய்துகின்றனர்.

ஒருமுறை 3 படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ”அனிருத் சினிமாவிற்குள் வந்ததற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவர் என்னுடைய உறவினராக இருந்தாலும், அவருக்கு திறமை இருக்கு அவரை வைத்து படம் பண்ணலாம்னு சொன்னது தனுஷ் தான். அவர் சினிமாவிற்குள் வர முழுகாரணமும் தனுஷ்தான், அனிருத்தை அவருடைய அப்பா அம்மா சிங்கப்பூருக்கு அனுப்பி படிக்க வைப்பதாக இருந்தது. ஆனால் தனுஷ்தான் சென்று என்ன நம்புங்க அவர்கிட்ட செம்ம டேலண்ட் இருக்குனு சொன்னாரு. கீ-போர்ட் வாங்கிக் கொடுக்குறதுல இருந்து, படம் பண்ணவச்சது, 3 படத்துல அவர் பண்ணட்டும்னு சொன்னவரைக்கும் எல்லாம் தனுஷ் தான்” என்று பேசியிருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்துவரும் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தை பதிவுசெய்து வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க வலைப்பேச்சு நிகழ்ச்சியில், தனுஷை அனிருத் அவருடைய கல்யாணத்திற்கும் அழைக்கவில்லை, வரவேற்புக்கு கூட அழைக்கவில்லை என்று சொல்லப்பட்ட விசயமும் பேசுபொருளாக மாறிவருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களால் 'DnA' என்று அன்போடு அழைக்கப்படும் தனுஷ் - அனிருத் கூட்டணி இதுவரை 5 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறது. 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம் என இவர்களின் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட்டடித்த நிலையில், தற்போது DnA கூட்டணிக்கு என்னாச்சு என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.