சுசி லீக்ஸ் பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன நடிகர் தனுஷ், சேனல் ஒன்றின் பேட்டியில் இருந்து திடீரென்று கோபத்தில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ், கஜோல், அமலா பால் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விஐபி 2’. சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் படம் வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத்துக்கு நேற்று முன் தினம் சென்ற தனுஷ், அங்குள்ள சேனல்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஒரு சேனலில், சுசிலீக்ஸ் விவகாரம், உங்கள் மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரச்னையாமே என்பது போன்ற சில சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டனர். கடுப்பான தனுஷ், என் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது முட்டாள்தனமான பேட்டி’ என்று கூறியபடி கோபத்தில் வெளியே சென்றார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.