சினிமா

ஹீரோ பாடகரானார்; பாடகர் ஹீரோவானார்

ஹீரோ பாடகரானார்; பாடகர் ஹீரோவானார்

webteam

விஜய் யேசுதாஸ் நாயகனாக அறிமுகமாகும் படைவீரன் படத்தில் நாயகன் தனுஷ் பாடகராகியுள்ளார். 

இயக்குநர் மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக இருந்தவர் தானா. இவர் இப்போது ‘படைவீரன்’ படத்தை இயக்கி வருகிறார். அதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, கலையரசன் நடித்துள்ளனர். ஹீரோயினாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் ஒரு புதுமுகம். மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் மனோஜ்குமார், இயக்குநர் கவிதா பாரதி நடித்துள்ளனர். மற்றும் நிதிஷ் வீரா, சுரே ஏகா, சாரா ஜோசப்,கன்யா பாரதி என பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தனது நண்பன் விஜய் யேசுதாசுக்காக  ‘லோக்கல் சரக்கா? பாரின் சரக்கா’ என்ற ஒரு க்ளப் சாங்கை தனுஷ் பாடிக் கொண்டுத்துள்ளார். பின்னணி பாடகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முன்னணி நடிகர் தனுஷ் பின்னணி பாடகராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.