சினிமா

கேன்ஸ் படங்களை பகிர்ந்து கொண்ட தனுஷ்

கேன்ஸ் படங்களை பகிர்ந்து கொண்ட தனுஷ்

webteam

தனது ட்விட்டர் பக்கத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படங்களை நடிகர் தனுஷ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பன்முக கலைஞர், நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அவருக்கு பல முகங்கள் உண்டு. சில தினங்கள் முன்புதான் அவர் தயாரித்துள்ள ‘காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனுஷை ‘நல்ல மருமகன். அவரைப்போல தாய், தந்தையரை மதிப்பவரை பார்க்க முடியாது. என் மகளை மிக அருமையாக பார்த்துக் கொள்கிறார்’ என்று புகழ்ந்திருந்தார்.

அந்த விழாவின் வெப்பமே இன்னும் குறையவில்லை. அதற்குள் தனது ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்திற்காக பிரான்சில் நடைப்பெற்ற கேன்ஸ் 2018 விழாவிற்கு படக்குழுவினருடன் தனுஷ் சென்றுள்ளார். அதற்கான படங்களை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்படத்தை மே 30ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.