வேலை இல்லா பட்டதாரி படத்தி இரண்டாம் பாகத்தை முடித்துவிட்ட தனுஷ், வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் ஹாலிவுட்டில் அவர் அறிமுகமாகும், ’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த பகிர்’ படத்துக்காக அவர் பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸ் செல்கிறார். இந்தப் படத்தை இரானிய இயக்குனர் மர்ஜான் சத்ரபி இயக்குகிறார். இதில் தனுஷ் ஜோடியாக ‘தி ஆர்டிஸ்ட்’ படத்தில் நடித்த பெரினீஸ் பெஜோ நடிக்கிறார். மற்றும் எரில் மொரியார்ட்டி, பர்கத் அப்டி, இந்தி நடிகை ’பண்டிட் குயின்’ சீமா பிஸ்வாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடப்பதாக இருந்தது. லொகேஷன் பிரஸ்சல்சுக்கு மாறியதால் இன்று அங்கு செல்கிறார் தனுஷ். அங்கு மூன்று மாதம் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.