Dhanush PT web
சினிமா

2025 | குபேரா படம் முதல் தேரே இஷ்க் மே வரை - தனித்துவமாக அமைந்த தனுஷின் திரைப்பயணம்

நடிகர் மற்றும் இயக்குனர் என இருதுறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.

PT WEB

செய்தியாளர் - செ. வாசு

தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரமாக இருந்து வருபவர் தனுஷ். இந்த வருடம் அவருடைய மூன்று முக்கிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மேன். அதில் நடிகர் மற்றும் இயக்குநர் என இருதுறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மூன்று திரைப்படமும் வெவ்வேறு கதைக்களம். மேலும், மூன்று திரைப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

குபேரா :  முதலில் வெளிவந்த திரைப்படம்

kubera

ஜூன் மாதத்தில் வெளியான ‘குபேரா’  திரைப்படம், இந்த ஆண்டின் தனுஷின் முதல் பெரிய படமாக அமைந்தது. இந்த படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா, இவர் இயக்கிய இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம். குற்றப்பின்னணி கொண்ட திரில்லர் கதையை மையமாகக் கொண்டது. திரையரங்குகளில் படம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும்  இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இட்லி கடை : தனுஷ் இயக்கி நடித்த படம்

Idli Kadai

 அக்டோபர் மாதத்தில் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படம், தனுஷ் இயக்கிய மூன்றாவது  படமாகும். தனுஷ், நித்யா மேனன் இணைந்து நடித்த இந்த படம் கிராமப் பின்னணி, நகைச்சுவை, உணர்வுப்பூர்வ கதையாக அமைந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இந்த திரைப்படம் ஒருதரப்பு மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான முதல் வார இறுதியில் படம் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அப்புடியே மெல்லமெல்ல குறைய தொடங்கியது. இத்திரைப்படம் மொத்தம் 72 கோடி வசூலித்துள்ளது.

தேரே இஷ்க் மேன் – வருடத்தின் மிகப்பெரிய வெற்றி

Tere Ishk Mein

நவம்பர் மாத இறுதியில் வெளியான ‘தேரே இஷ்க் மேன்’ திரைப்படம். இந்த ஆண்டு தனுஷின் மிகப்பெரிய வெற்றி படமாய் உருவானது. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றள்ளது. தனுஷ், க்ரித்தி சனோன் இணைத்து ஜோடியாக நடித்த இந்த காதல் படம் இந்தியா மட்டுமல்லாமல்  உலகம்  முழுவதும்  சிறந்த வசூல் சாதனை படைத்துவருகிறது. இதுவரைக்கும் 152 கோடி வசூலித்துள்ளது.

நடிகர் தனுஷ்

தனுஷ் இந்த ஆண்டு நடித்த  மூன்று படங்களிலும்  மூன்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். பல மொழி படங்களிலும் நடித்து ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்திலும் அவரது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். இந்த ஆண்டு அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

 D54 – இயக்கம் : விக்னேஷ் ராஜா

D54

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத தற்போது D54 என அழைக்கப்படுகிறது. இந்த  நிலையில் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படம் 2026 பிப்ரவரி மாதம் வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தனுஷை மையமாகக் கொண்ட த்ரில் – இன்வெஸ்டிகேஷன் கதை என தகவல்.

 D55 – இயக்கம் : ராஜ்குமார் பெரியசாமி

ராஜ்குமார் பெரியசாமி - தனுஷ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி இணைந்த நடிக்கும் புதிய படத்திற்கு D55 என அழைக்கப்படுகிறது. இத்திரைப்படம் படப்பிடிப்பிற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. மம்முட்டியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

D56  – இயக்கம் : மாரிசெல்வராஜ்.

dhanush mariselvaraj

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு D56 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கர்ணன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைகிறார்கள். அதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.