சினிமா

மண வாழ்க்கையிலிருந்து பிரிந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி

மண வாழ்க்கையிலிருந்து பிரிந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி

JustinDurai

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி, மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

சினிமாவில் முன்னணி நடிகராக வளரத் தொடங்கிய காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004ல் திருமணம் செய்து கொண்டார் தனுஷ். 18 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்துவந்த நிலையில், மண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக இருவரும் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும்படி இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.