இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
முதல் இடம் - ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தரவுகளின்படி, படம் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இரண்டாவது இடம் - 130 கோடி ரூபாய் முதல் 275 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகர் விஜய் இரண்டாம் இடத்திலும்,
மூன்றாவது இடம் - 150 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் சம்பாதிக்கும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் 3 ஆவது
இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடம் - 125 கோடி ரூபாய் முதல் 270 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகர் ரஜினிகாந்த் 4ஆம் இடத்திலும்,
5வது இடம் - 100 கோடி ரூபாய் முதல் 275 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகர் அமீர் கான் 5ஆம் இடத்திலும்,
6வது இடம் - 100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் நடிகர் பிரபாஸ் 6ஆவது இடத்திலும் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
7வது இடம் - 105 கோடி ரூபாய் முதல் 165 கோடி ரூபாய் வரை
சம்பளம் பெறும் நடிகர் அஜித் குமார் 7ஆவது இடத்திலும்,
8, 9வது இடம் - 100 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை
சம்பாதிக்கும் நடிகர் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 8, 9 ஆகிய இடங்களிலும்,
10வது இடம் - 60 கோடி ரூபாய் முதல் 145 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் நடிகர் அக்ஷய் குமார் 10ஆவது இடத்திலும் இருப்பது
தெரியவந்துள்ளது.