சினிமா

ரசிகர்களின் வரவேற்பால் நெகிழ்ந்து போன தீபிகா படுகோனே

ரசிகர்களின் வரவேற்பால் நெகிழ்ந்து போன தீபிகா படுகோனே

rajakannan

'பத்மாவத்' படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளது குறித்து நடிகை தீபிகா படுகோனே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கடும் எதிர்ப்புக்கு இடையே நாடு முழுவதும் இன்று 'பத்மாவத்' திரைப்படம் வெளியாகியுள்ளது. கர்ணி சேனா அமைப்பினர் வன்முறை காரணமாக பாஜக ஆளும் சில மாநிலங்களில் திரைப்படம் வெளியாகவில்லை. மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், நிச்சயம் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பேன் என்று ரசிகர்கள் பலரும் ட்விட்டர் வலைதளங்களில் டிக்கெட்டுகளுடன்  தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களின் வரவேற்பு தீபிகா படுகோனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் பார்ப்பை என்னால் நம்ப முடியவில்லை என்று தனது வியப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ரசிகர்கள் டிக்கெட்டுகளுடன் பதிவிட்ட படங்களை தொகுத்து தீபிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பு மகிழ்ச்சியின் எல்லையை தாண்ட வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சினிமா வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் 'பத்மாவத்' திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.