சினிமா

வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தவர் விவேக் - துணை முதல்வர்

வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தவர் விவேக் - துணை முதல்வர்

webteam

வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் மகிழ்ச்சியில் திளைக்க செய்தவர் விவேக் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் விவேக் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். <br><br>திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய திரு.விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,</p>&mdash; O Panneerselvam (@OfficeOfOPS) <a href="https://twitter.com/OfficeOfOPS/status/1383252517857886209?ref_src=twsrc%5Etfw">April 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய விவேக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர்.

பத்மஸ்ரீ விவேக்கின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.