வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு 12வது படம்! இத்தனை குறைந்த படங்களில் உச்சம் தொட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமே. வசூல் சர்க்கரவர்த்தி என அவரை கொண்ட்டாடுகிறார்கள் விநியோகிஸ்தர்கள். அதை நிரூபிக்கும் வகையில் மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் பட சூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே படம் விற்பனையாகி விட்டது. தமிழில் ஒரு சில நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓரிரு வெளிநாடுகளில் விற்பனையாகும். அந்த இடத்தையும் பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன். தற்போது சிங்கப்பூர், அமெரிக்கா, மற்றும் ஹலப் நாடுகளிலும் வேலைக்காரன் படத்தை வாங்கி வீட்டார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது கனடாவிலும் வேலைக்காரன் கணிசமான தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. ஷூட்டிங் நடைபெற்று வரும்போதே ஒருபடத்தின் வெளிநாட்டு உரிமை இத்தனை நாடுகளில் விறபனையாகி இருப்பது இதுதான் முதல் முறை.