நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை குறித்து யூடியூப் வலைத்தளத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். எளிய எளிவர்கள், வசதியில்லா குழந்தைகள் உள்ளிட்டோருக்கு இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்பும் வகையில் யூடியூப் வலைத்தளத்தில் வீடியோ வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை மீது யூடியூப்பில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் நற்பணி மன்ற நிர்வாகியான சங்கர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்