சினிமா

“ஒரு பெற்றோராக, குடிமகனாக கவலை கொள்கிறேன்”- ஹிருத்திக் ரோஷன்

“ஒரு பெற்றோராக, குடிமகனாக கவலை கொள்கிறேன்”- ஹிருத்திக் ரோஷன்

Rasus

நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, ஒரு பெற்றோராக இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன் என ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, ஒரு பெற்றோராக இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன். அங்கு விரைவில் அமைதி திரும்ப பிரார்த்தனை செய்கிறேன். சிறந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் இருந்தே பாடங்களை கற்கின்றனர். உலகின் இளைய ஜனநாயகத்திற்கு சல்யூட்” எனத் தெரிவித்துள்ளார்.