சினிமா

தீபிகா படுகோன் உலகிற்கே ராணி: வின் டீசல் புகழாரம்

webteam

தீபிகா படுகோன் இந்த உலகிற்கே ராணி என ஹாலிவுட் அதிரடி நாயகன் வின் டீசல் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள “ரிட்டர்ன் ஆப் த ஸென்டர் கேஜ்” என்ற படம் உலகம் முழுவதும் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இத் திரைப்படம் இந்தியாவில் மட்டும் முன்கூட்டியே ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் அறிமுகவிழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வின் டீசல் மும்பை வந்தார்.

இவ்விழாவில் பேசிய அவர் இந்தியா வரும் சந்தர்பத்தைத் தான் எதிர்பார்த்து காத்திருந்ததாக தெரிவித்தார். தீபிகா பற்றிப் பேசிய அவர், அவர் தேவதை போன்றவர் என்றார். தன் வாழ்வில் தீபிகா வந்ததற்கு மகிழ்ச்சி என்றும் கூறினார் வின் டீசல். தீபிகா படுகோன் திரையில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தீபிகா இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும் அவர் இந்த உலகிற்கே ராணி என்றும் குறிப்பிட்டார். தீபிகாவின் நடிப்பில் வெளியான ”பஜ்ராவோ மஸ்தானி” தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவரது நடிப்பு அதில் அற்புதமாக இருந்ததாகவும் வின் டீசல் புகழ்ந்தார்.