தங்கல் பட நாயகி ஜைரா வாசிமின் கார் தால் ஏரியில் கவிழ்ந்தது. நல்ல வேளையாக அவர் காயம் எதுவுமின்றி தப்பினார்.
வசூலிலும், புகழிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தங்கல் படத்தில் இளம்வயது கதாநாயகியாக நடித்தவர் ஜைரா வாசிம். இவரது கார் ஜம்மு காஷ்மீரில் விபத்துக்குள்ளானது.
அவர் தனது நண்பர்களுடன் காரில் ஜம்முகாஷ்மீரில் பயணம் செய்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தால் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் ஜைரா வாசிம் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். பலத்த காயங்களுடன் அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.