சினிமா

“ எனது தந்தையின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது” - எஸ்பிபியின் மகன் சரண்

“ எனது தந்தையின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது” - எஸ்பிபியின் மகன் சரண்

webteam

கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் தனது தந்தை உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என எஸ்பிபியின் மகன் சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயக்கநிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், மருத்துவமனையின் 6 ஆவது மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி.பி.க்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தின் அளவும் குறைக்கப்பட்டது.

எஸ்பிபிக்கு அளிக்கப்படும் சிசிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்களும் கூறினர். இந்நிலையில், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது தந்தையின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அவரின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.