சினிமா

வரலட்சுமி நடிக்கும் பட ஷூட்டிங்கில் விபத்து: சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி!

வரலட்சுமி நடிக்கும் பட ஷூட்டிங்கில் விபத்து: சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி!

webteam

வரலட்சுமி நடிக்கும் கன்னட பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது. 

வரலட்சுமி சரத்குமார், சிரஞ்சீவி சார்ஜா, சேதன் உட்பட பலர் நடிக்கும் கன்னட படம் ’ரணம்’. வி.சமுத்ரா இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பெங்க ளூரு அருகில் உள்ள பாகளூரில் நடந்து வந்தது. அங்கு நேற்று முன் தினம் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அதாவது வேகமாக வரும் கார்கள் நேருக்கு நேர் மோதி தீ பிடித்து எரிய வேண்டும் என்பது காட்சி. இந்தப் படப்பிடிப்புக்காக அந்த சாலையை தற்காலிகமாகத் தடுத்திருந் தனர். 

அப்போது, எலஹங்காவில் உள்ள கட்டிகேனஹள்ளியை சேர்ந்த தப்ரேஜ் கான் என்பவர், தனது மனைவி சுமேரா பானு (28), மகள்கள் ஆயிஷா பானு (5), ஜனைப் ஆகியோருடன் சுலிபெல்லே பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இங்கு சாலை தடுக்கப்பட்டிருந்ததால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிந்தார். அவர்களுடன் அக்கம் பக்கத்தினரும் அந்த சாலை வழியாக வந்தவர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். 

ஆர்வ மிகுதியில், சுமேரா பானு தனது மகள்களுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அருகில் சென்றார். அப்போது காரை வெடிக்க வைப்பதற் காகப் பயன்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் சிலிண்டர், வெடித்துச் சிதறியது. இதில் சுமேரா பானுவும் ஆயிஷாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். மற்றொரு மகள் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர், காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்ரேஜ் கான் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர் சீனிவாஸ், இயக்குனர் சமுத்ரா, ஸ்டன்ட் இயக்குனர் உட்பட 4 பேர் வழக்குப் பதிவு செய் துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.