சினிமா

’’சி.எஸ்.கே சிங்கங்களா’’ - சென்னை சூப்பர் கிங்ஸை கவுரவித்த கொரோனா குமார் திரைப்படப் பாடல்

’’சி.எஸ்.கே சிங்கங்களா’’ - சென்னை சூப்பர் கிங்ஸை கவுரவித்த கொரோனா குமார் திரைப்படப் பாடல்

Sinekadhara

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘கொரோனா குமார் ‘ திரைப்படக் குழு சார்பில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா குமார் படத்தை ரௌத்திரம் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமான கோகுல் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். கொரோனா குமார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சி.எஸ்.கே சிங்கங்களா என்ற பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. தல தோனி மற்றும் சி.எஸ்.கே அணியின் தீவிர ரசிகரான சிம்புவும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.

இதற்குமுன்பே சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சி.எஸ்.கேவின் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.