சினிமா

போலீஸில் ஆஜராக பஹத் பாசிலுக்கு கோர்ட் உத்தரவு!

போலீஸில் ஆஜராக பஹத் பாசிலுக்கு கோர்ட் உத்தரவு!

webteam

கேரள குற்றப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கமளிக்க, நடிகர் பஹத் பாசிலுக்கு ஆழப்புழா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரியில் போலி வாடகை வீடு ரசீதை அளித்து தங்களது கார்களை பதிவு செய்து லட்சக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக நடிகை அமலா பால், நடிகர் பஹத் பாசில், நடிகரும், பா.ஜ. எம்.பி.யுமான சுரேஷ் கோபி ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க, ஆழப்புழா மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார் பஹத் பாசில். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கேரள மாநில குற்றப் பிரிவு போலீசில் ஐந்து நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 
பஹத் பாசில் சமீபத்தில் தான், ரூ.17.68 லட்சத்துக்கு சாலை வரி கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.