war vs coolie web
சினிமா

WAR 2-ஐ விட கூலிக்கு அதிக வரவேற்பு.. ஆனாலும் ரூ.1000 கோடி வசூல் கேள்விக்குறி?

நடிகர் ரஜின்காந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளிவந்திருக்கும் கூலி திரைப்படம் இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே ’மோனிகா’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் ’கூலி’ படம் நேற்று ஆகஸ்டு 14ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது.

coolie

இந்நிலையில் படம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கும் நிலையில், இந்தி ரசிகர்களிடையே படத்திற்கான வரவேற்பு நன்றாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1000 கோடி பெஞ்ச்மார்க்கை தவறவிட்டதா கூலி..

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியான அதே தேதியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ’வார் 2’ திரைப்படமும் ரிலீஸானது. இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானாலும், டிக்கெட் முன்பதிவில் வார் 2 படத்தை விட 5 மடங்கு அதிக எண்ணிகையை கொண்டிருந்தது கூலி.

war 2

இந்நிலையில் கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், வார் 2-க்கு அதிகப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை, படம் சுமார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களை கடந்து இந்தி ரசிகர்களிடமும், வட மாநிலத்திலும் கூலி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், டிக்கெட் முன்பதிவில் கூட தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் கூலி படத்திற்கு அதிகம் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியான ஒரு சூழலில் வார் 2 படமும் பெரிய போட்டியாக இல்லாத நிலையில், கூலி திரைப்படம் 1000 கோடி வசூலை கடக்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலில் பெரியளவு வடமாநிலம் பங்காற்றிய நிலையில், கூலிக்கு அப்படியான சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் கலவையான விமர்சனங்கள் பெற்றிருப்பது, படத்தை 1000 கோடி என்ற மைல்கல்லை கடப்பதற்கு தடையாக இருக்கும் என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கூலி திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.