பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். கின்னஸ் சாதனை படைத்த இவர், சமையல் துறையில் சிறப்பான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்ற முனைவர் கே. தாமோதரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
2010-ம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் வரும் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே அதிக அளவில் பிரபலமானவர்.