சினிமா

தளபதிக்கும் விவேகத்துக்கும் என்ன தொடர்பு?

தளபதிக்கும் விவேகத்துக்கும் என்ன தொடர்பு?

webteam

தல படத்துக்கும் தளபதி படத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கா... இருக்கே..

விஜய் நடித்த தளபதி 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரப் போகிறது என்று அவரது ரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு இருக்கின்றனர்.
விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமல்லாமல் அதன் பாடல் சர்வைவாவும் வெளி வந்து வைரலானது. தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் அவரவர் படம் பற்றி புளகாங்கிதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தவர் ஒரே நபர்தான். கோபி பிரசன்னா எனும் டிசைனர்தான் அவர். கோபி பிரசன்னா தெறி, கத்தி ஆகிய விஜய் படங்களுக்கு ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்தவர். சமீபத்தில் வெளியான விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வடிவமைத்தவர் இவர்தானாம்.
இன்று வெளிவர இருக்கும் தளபதி 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இவரது வடிவமைப்பில்தான் வெளிவர இருக்கிறது.