சினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் குழப்பம்...

subramani

50'வது சர்வதேச திரைப்படவிழா கோவாவில் இம்மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200’க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் இந்திய மொழிகளில் 26 திரைப்படங்கள் திரையிடப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

இவ் விழாவில் இந்திய சினிமாவின் முன்னோடி ஜாம்பவான் ‘சத்யஜித்ரே’வுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 'ஹென்ரிக் இப்சனின்’ நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு 1989’ஆம் ஆண்டு ஜித்ரே இயக்கிய ’குணஷத்ரு’ திரைப்படம் திரையிடப்படவிருப்பதாக IFFI தனது இணைய பக்கத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் அதில் இயக்குநர் சத்யஜித்ரேவின் புகைப்படத்திற்கு பதிலாக பாடலாசிரியர் குல்சரின் புகைப்படத்தை தவறுதலாக பதிவேற்றியுள்ளது IFFI. அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்த ஒருவர் இணையத்தில் பதிவிட, தற்போது அந்தப் படம் வைரலாகியிருக்கிறது.

”குல்சருக்கும், சத்யஜித்ரேவுக்கும் வித்யாசம் தெரியாமல் சர்வதேச திரைப்படவிழாவை நடத்துகிறதா IFFI...?” என பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.