சாம் CS  x page
சினிமா

பணமோசடி புகார் | ”நடந்தது இதுதான்.. நடவடிக்கை எடுப்பேன்” இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விளக்கம்!

தன் மீதான பண மோசடி குற்றச்சாட்டு பொய்யானது என இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் புதிய தலைமுறையிடம் விளக்கமளித்துள்ளார். நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்...

PT WEB

தன் மீதான பண மோசடி குற்றச்சாட்டு பொய்யானது என இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் புதிய தலைமுறையிடம் விளக்கமளித்துள்ளார். நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்...

விக்ரம் வேதா, கைதி உள்ளிட்ட ஹிட் படங்களின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்... இவர் மீது தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்துள்ள பண மோசடி புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த சமீர் அலிகான், "சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ்" என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். "தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு" என்ற படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாக நடிக்க திட்டமிட்ட இவர், இசையமைப்பு பணிக்காக சாம்.சி. எஸ்-ஐ தேர்வு செய்துள்ளார். அதற்காக 2020ஆம் ஆண்டு அவருக்கு 25 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் சமீர் கூறியுள்ளார். அந்த சமயம் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை எடுக்கமுடியாமல் போனதாகவும், ஊரடக்கு முடிந்தபின் தொடர்புகொண்டபோது, சாம்.சி.எஸ் இசையமைக்க தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். புதுமுக நடிகர்களுக்கு இசையமைப்பதில்லை எனவும், அப்படி இசையமைக்க வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமென சாம்.சி.எஸ். கூறியதாக அவரின் உதவியாளர் தெவித்ததாக பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சமீர்.

சாம் CS

இதுகுறித்த விளக்கம் பெறுவதற்காக சாம்.சி.எஸ் செல்ஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டப்போது, தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் விவாதித்துவிட்டதாகவும், ஆனால், கொடுத்த பணத்தை விட அதிக அளவில் பணம் கேட்பதா சமீர் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, தனது தரப்பு விளக்கத்தை விரைவில் வெளியிடுவதோடு, சமீர் அலிகான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு வருவதாகவும் சாம் CS விளக்கமளித்துள்ளார்.