சினிமா

சிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்

சிறையால் சஞ்சய் தத்தின் பயோபிக்குக்கு சிக்கல்

webteam

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள சஞ்சு படத்துக்கு எதிராக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தில் சிறையில் கழிவறை நிரம்பி வழிவது போல காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி மூலம் சிறைச்சாலை மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் பிரித்வி மஸ்கி என்பவர் புகார் அளித்துள்ளார். இதனால் மக்களுக்கு‌ சிறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீதும் தவறான புரிதல் ஏற்படும் என்பதால் இந்த காட்சிகளை குறித்து நடவடிக்கை எடுக்கும் படி மத்திய தரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் சமூக ஆர்வலர் பிரித்வி மஸ்கி எச்சரித்துள்ளார்.