சினிமா

பாகுபலி 2 படத்தைப் பார்க்க பெர்சனல் லோன் வாங்கணுமா?

பாகுபலி 2 படத்தைப் பார்க்க பெர்சனல் லோன் வாங்கணுமா?

webteam

பாகுபலி 2 ரிலீஸ்தான் இன்று பரபரப்பான செய்தி. முதல் நாளான இன்று படம் பார்க்க வேண்டுமானால் 500ல் இருந்து ஆரம்பித்து 5 ஆயிரம் ரூபாய் வரையில் செலவழிக்க வேண்டிய நிலை.

படம் பற்றி நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்திருப்பதோடு, டிக்கெட் விவகாரம் குறித்தும் காய்ச்சி எடுத்துள்ளனர். இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் சூப்பர். பிரபாஸ், அனுஷ்காவின் நடிப்பு ஆசம் என்றெல்லாம் ஒருபுறம் பாராட்டினாலும், ஆன்லைனிலும், திரையரங்குகளிலும் டிக்கெட் கிடைக்காத பலர் பாகுபலியை கடிந்து கொண்டுள்ளனர். கிடைக்கும் டிக்கெட்டுகளும் சில இடங்களில் ரூ.5000 வரை விற்கப்படுவதால் கடுப்பான நெட்டிசன்கள் பாகுபலி 2 படத்தினை குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டுமானால் பெர்சனல் லோன் வாங்கித்தான் பார்க்க வேண்டுமா? என கேட்டுள்ளனர்.