ஜாலியா இருந்த ஒருத்தன்’  teaser
சினிமா

ஜீவாவின் ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர்.. கவனம் பெற்ற முதல்வர் விஜய் குறித்த வசனம்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாக்கியுள்ள ’ஜாலியாக இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் விஜய் குறித்தான வசனம் கவனம் பெற்றுள்ளது.

Premkumar S

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ், நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கரராஜா கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் தான், இந்தப் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தப்படத்தில் நாயகனாக ஜீவா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் பரிதாபங்கள் சுதாகர் நடித்துள்ளார். டீசரில் ஒரு கல்யாணத்தை ஜீவாவும், சுதாகரும் நிறுத்தப்போவதாக காட்சி அமைந்திருக்கிறது. அப்போது, சுதாகர், ”உன்னை போல் கல்யாணத்தை நிறுத்த சென்றவர் தான், இன்று தமிழகத்தின் தைரியமான முதலமைச்சர்” என கூறுவது போன்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அதேசமயம், இந்த வசனத்தைக் கூறும்போது, முதல்வர் விஜயின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தசூழலில் தான், முதல்வர் விஜய் குறித்து பேசியிருக்கும் இந்த வசனம் கவனம் பெற்றுள்ளது.

அதேபோல, முதல்வர் விஜய் நாளை (ஜூன் 22) தனது பிறந்த நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்த டீசரில் முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.