படப்பிடிப்பில் நடிகைகள் இருவர் மோதலில் இறங்கியதால் படக்குழு அப்செட் ஆகியுள்ளது.
தமிழில், ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த இவர், இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் அங்கு நடித்த பிங்க், நாம் ஷபானா படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்துள்ளன. இப்போது ’ஜுத்வா’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார். டேவிட் தாவன் இயக்கும் இந்தப் படத்தில் வருண் தாவன் ஹீரோ. ஹீரோயின்களாக ஜாக்குலின் பெர்னாண்டஸ், டாப்ஸி நடிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு நடிகைகளுக்கும் செட் ஆகவில்லையாம்.
இதுபற்றி படக்குழு கூறும்போது, ‘இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கூட பேசிக்கொள்வதில்லை. இருவருக்கும் பனிப்போர் இருப்பது உண்மைதான். பல இந்தி ஹீரோயின்களுக்கு இடையே இது போல் பிரச்னை இருக்கிறது. அது போல்தான் இவர்களுக்குள்ளும். அதை பெரிசுப்படுத்தினால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதால் அனைவரும் அமைதியாக இவர்களின் போரை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றனர்.