சினிமா

அஜித்- விஜய் ரசிகர்கள் மோதல்.. கத்தியால் குத்திய நபர் கைது..!

அஜித்- விஜய் ரசிகர்கள் மோதல்.. கத்தியால் குத்திய நபர் கைது..!

Rasus

திருவள்ளூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில், அஜித்குமார் - விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டதில் ஒருவரை கத்தியால் குத்தப்பட்டதன் காரணமாக, இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரபல நடிகர்கள் அஜித்குமார் மற்றும் விஜய்யின் ரசிகர்கள், 2 நாள்களுக்கு முன் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் எதிரெதிர் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் வெளியிட்டனர். இந்த மோதல், திருவள்ளூர் மாவட்டம் புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலும் எதிரொலித்தது.

ரோஷன் என்ற விஜய் ரசிகருக்கும், உதயசங்கர் என்ற அஜித் ரசிகருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில், வழக்கம்போல தங்கள் அபிமான நடிகர்கள் குறித்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, உதயசங்கரை ரோஷன் கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்த புழல் காவல் நிலையத்தினர், உதயசங்கரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கத்தியால் குத்திய ரோஷனை காவல் துறையினர் கைது செய்து‌ள்ளனர். இன்னும் 3 மாதங்களில் உதயசங்கர் இலங்கை திரும்ப உள்ள நிலையில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.