கிறிஸ்டோபர் நோலன் pt web
சினிமா

THE ODYSSEY | கிறிஸ்டோஃபர் நோலனின் புதுப்பயணம்.. எதை நோக்கி இருக்கும்?

காலத்தை பதிவு செய்யும் கருவிதான் சினிமா... அதே சினிமாவில் காலத்தை மையமாக வைத்து கதை சொல்லும், அசாத்திய கலைஞன் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன்.. அவரின் அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது..

PT WEB

தமிழில் பொதுவாக நடிகர் கமல்ஹாசனின் படம் புரியாது என்றொரு TALK இருக்கும். ஏனென்றால் அவரின் கதைகள் அறிவுப்பூர்வமாவும், சமகாலத்தில் யூகிக்க முடியாததாவும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மீறியதாவும் இருக்கும். இதுபோல, ஹாலிவுட் சினிமா ரசிகர்களெல்லாம் புரியாமல் வியப்பது, கிறிஸ்டோஃபர் நோலனோட படங்களை பார்த்துதான்.

ஒருவருக்கு TIME சரியாக இருந்தால், சிக்கல்கள் எல்லாம் சரியாகுமென சொல்வதுண்டு.. ஆனால், அந்த TIME-ஐ மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்து, அதில் சிக்கல்களை உருவாக்கி, பார்ப்பவர்களின் தலையை பிய்த்துக்கொள்ள வைப்பதுதான், நோலனோட ஸ்டைல். அப்படிப்பட்ட நோலனின் அடுத்த படத்துக்கு THE ODYSSEY என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 2026 ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான யூனிவர்சல் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்தப் படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துல படமாக்கப்பட உள்ளது.

'கிறிஸ்டோஃப்ர் நோலன் இயக்கும் அடுத்த படத்திற்கு 'THE ODYSSEY' என பெயரிடப்பட்டுள்ளது

ODYSSEY என்றால் என்ன என்று தேடிப் பாத்தால், 2 விதமாக தகவல்கள் கிடைக்கின்றன. ஒன்று, அனுபவங்கள் நிறைந்த நீண்ட பயணம்; இன்னொன்று, கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதின காவியத்துக்கு, ODYSSEY என்றுதான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த காவியம் நீண்ட பயணத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் நோலன் என்ன மாதிரியான படம் எடுக்கப்போகிறார் என நம்மாலும் கொஞ்சம் கணிக்க முடிகிறது.

ஏனென்றால், நோலனின் படங்களில் பயணங்கள் புதிதல்ல. அவர், இதற்கு முன்னாடி எடுத்த படங்களில், பயணம்தான் மையக் கருவாக இருக்கும். இந்த வகையில் 3 படங்களை குறிப்பிடலாம். 2000-ம் ஆண்டில் வெளியான MEMENTO படத்தில், ஹீரோவுக்கு SHORT TERM MEMORY LOSE இருக்கும். அவர், தன்னோட வாழ்க்கையில முன்னாடி நடந்த நிகழ்வுகள கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு கொண்டுவருவதன் மூலம், இலக்கை நோக்கி பயணிப்பார்.

interstellar

அதேபோல கனவுகள் வழியாக கதாபாத்திரங்களின் ஆழ் மனதில் ஒளிந்திருக்கும், தனித்துவமான ரகசியங்களை தேடுற ஹீரோவோட நெடும்பயணம்தான், INCEPTION. அடுத்ததாக INTERSTELLAR. இதில், நாம் வாழும் பூமி அழிவை நோக்கி போகிற போது, விஞ்ஞானிகள் புது கிரகங்கள தேடி மேற்கொள்ளும் விண்வெளிப் பயணம்தான் கதை.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள, THE ODYSSEY என்ற இந்த டைட்டில், நோலன் அடுத்து எதை நோக்கி பயணம் செய்வார், அவரின் கதாபாத்திரங்களின் பயணம் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.