விக்ரம் நடிக்கவுள்ள ‘மஹாவீர் கர்ணா’ 32 மொழிகளில் டப் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் விக்ரம் கையில் இந்த ஆண்டு ‘சாமி ஸ்கொயர்’ வெளியாக உள்ளது. இதனை இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார். இதைவிட ஹைலைட் செய்தி அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை 300 கோடி பட்ஜெட்டில் நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ’என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளக் காவியத்தை தழுவி எடுக்க உள்ளதாக தெரிகிறது. ஆர்.எஸ்.விமல் இதனை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தை 32 மொழிகளில் படக்குழு டப்பிங் செய்ய இருப்பதாக தெரிகிறது. எதிர்பார்ப்பை மீறி படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளதால் இத்தனை மொழிகளில் மாற்றம் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் செய்தி வலம்வர தொடங்கியுள்ளது.