சினிமா

"என் மகளை கோழையாக வளர்க்கவில்லை; இது கொலைதான்!" - சித்ராவின் தாய் கதறல்

"என் மகளை கோழையாக வளர்க்கவில்லை; இது கொலைதான்!" - சித்ராவின் தாய் கதறல்

webteam

தன் மகளை கோழையாக வளர்க்கவில்லை எனவும், அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் எனவும் சின்னத்திரை நடிகை சித்ராவின் தாயார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாயார் “என் மகளை கோழையாக வளர்க்கவில்லை. அவள் தைரியமானமவள். சித்ராவிற்கும் ஹேம்நாத்திற்கும் சண்டை நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஹேம்நாத்தான் எனது மகளை அடித்துக் கொன்றுவிட்டார். எல்லோரும் சென்றுதான் பிப்ரவரி 10 ஆம் தேதி திருமணம் என தேதி குறித்துவிட்டு வந்தோம். என்ன ஆனது என்று தெரியவில்லை. அடித்துக் கொன்றுவிட்டார்கள். தூக்கு மாட்டிக்கொள்ளும் அளவிற்கு என் மகள் கோழையில்லை.

அம்மா, அம்மா என்று பேசி என்னை ஹேமந்த் கவிழ்த்துவிட்டார். என் மகளின் பணத்துக்காக உள்ள நுழைந்துவிட்டார்போல. அவர் எப்போது வந்தாரோ அன்றிலிருந்து என்னிடம் ஒரு ரூபாய் கூட கொடுத்தது கிடையாது. எப்போதும் என் பெண்ணுடன்தான் ஹேம்நாத் இருப்பார். கடைசியாக செவ்வாய்க்கிழமை இரவு போனில் மகளிடம் பேசினேன். இரவு நேரமாகும் எனக் கூறினாள். அதற்குள் அங்கு சூட்டிங்கிற்கு கூப்பிடவும் சென்றுவிட்டார். அடுத்தநாள் காலை சித்ராவின் மாமனார் போன் செய்து சித்ரா மோசம் செய்துவிட்டார் எனக்கூறினார். எனது மகளை ஹேம்நாத்தான் கொன்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே சித்ராவின் உடல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அவரது உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது தந்தை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.