சினிமா

சிரஞ்சீவி - மோகன்ராஜாவின் ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக்: ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு

sharpana

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். சிரஞ்சீவி, மோகன்லால் கேரக்டரில் நடிக்கிறார். இது சிரஞ்சீவினின் 153-வது படம். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், நேற்று படத்தின் அனைத்து பாடல்களையும் முடித்துவிட்டதாக அறிவித்தார், இப்படத்தின் இசையமைப்பாளர் தமன்.

இன்று முதல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படப்பிடிப்பு துவங்கியதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் மோகன் ராஜா.

இதற்கு முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ படம், மலையாள சினிமாவில் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானதோடு வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. மோகன்லால், விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், ஸ்டைலிஷ் அரசியல்வாதியாக டொவினோ தாமஸ் உட்பட பலர் போட்டிப்போட்டு நடித்து பாராட்டுகளை குவித்தனர். அரசியல்வாதி மறைவுக்குப் பிறகு மருமகனுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் மோதலை சுவாரசியமான திரைக்கதை மூலம் பல ட்விஸ்டுகளால் காட்சிப்படுத்தி ரசிக்கவைத்தார் பிரித்விராஜ்.