சினிமா

சுசித்ராவின் பதிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: செல்வராகவன்

சுசித்ராவின் பதிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: செல்வராகவன்

webteam

சுசித்ராவின் பதிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இரு தினங்களாக பாடகி சுசித்ராவின்‌ டிவிட்டர் கணக்கில் வெளியாகி வரும் ட்வீட்டுகள் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த ட்வீட்டுகளில் பாடகி சின்மயி குறித்தும் தகவல் வெளியாகி இருந்தது.

சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் பற்றியும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளிவந்தன. இதுதொடர்பாக செல்வராகவன் அவரது ட்விட்டர் பதிவில் சுசித்ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை நான் பெரிதாக்க விரும்பவில்லை. எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. கார்த்திக்கை நான் மதிக்கிறேன். தொடர்ந்து நான் படங்களை இயக்குவதில் தான் கவனமாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

சின்மயி குறித்தும் அவதூறு பதிவுகள் வந்தன. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமாரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், சுசித்ராவுக்கு உடல் நலம் சரியில்லை என அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் சூழலை தாம் புரிந்து கொண்டதாக பதிவிட்டுள்ள சின்மயி தம்மை பற்றி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தவறானவை என தெரிவித்துள்ளார். தான் நேர்மையாக இருப்பதாகவும் யாரை நினைத்தும் பயப்பட தேவையில்லை என்றும் சின்மயி கூறி இருக்கிறார்.