சினிமா

“அப்பா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடிய முதல்வருக்கு நன்றி” - நடிகர் பிரபு

“அப்பா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடிய முதல்வருக்கு நன்றி” - நடிகர் பிரபு

sharpana

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சிவாஜி கணேசனின் 93ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்றார். அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் புகைப்படங்களையும் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சென்று மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மண்மண்டபத்தில் மரியாதை செலுத்தினர். இதேபோல், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிவாஜி பிறந்தநாளில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் பிரபு தெரிவித்தார்.