சினிமா

சினிமாவை காப்பாற்ற குரல் கொடுங்க... ரஜினிக்கு சேரன் கோரிக்கை

சினிமாவை காப்பாற்ற குரல் கொடுங்க... ரஜினிக்கு சேரன் கோரிக்கை

webteam

இரட்டை வரியால் ஸ்தம்பித்து கிடக்கிறது சினிமா உலகம். தியேட்டரை மூடி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போராட்டித்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை எதிர்த்து திரைத்துறையினர் அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் ரஜினி இதுவரை இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவை காப்பாற்ற ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என இயக்குநரும் நடிகருமான சேரன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ரஜினி சார், தயவுசெய்து ஜிஎஸ்டி வரி, தமிழக அரசின் வரி உயர்வுக்கு எதிராக குரல் கொடுங்கள். உங்கள் மதிப்புமிகுந்த குரலால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முயற்சி எடுங்கள்’’ என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.