மறைந்த பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில், 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி. எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவிற்கு பதிலளித்த விருது வழங்கும் மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், 2005 ஆம் ஆண்டு முதல் பிரபல ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்குவதாகவும் கூறியிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி்.ஜெயச்சந்திரன், 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி. எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்தார். அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.