நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்ட உத்தரவுக்கு தடைவிதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டது குறித்து அளிக்கப்பட்ட புகார்களை தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் பரிசீலித்தார். அத்துடன் வரும் 23ஆம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைப்பதாகவும் அவர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன் முறையிடப்பட்டது.
அத்துடன் தேர்தலை நிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். இதற்கிடையே விஷால் அணி மற்றும் பாக்யராஜ் அணியினர் தேர்தலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.