இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர் பிரபாஸ். அவரது படங்களுக்காக அவர் பேசப்படுவதுபோல, உணவுப் பிரியர் என்ற முறையிலும் பிரபாஸ் அடிக்கடி பேசப்படுவார். அப்படி சமீபத்தில் `Couple Friendly' படக்குழுவுடன் ஓர் உரையாடல் நடத்தியுள்ளார் பிரபாஸ். அதில் நடிகர் சந்தோஷ் ஷோபன், "நீங்கள் பிற மாநிலங்களில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவீர்களாமே?" எனக் கேட்டார்.
பிரபாஸ் அதற்குப் பதில் சொன்னபோது, "பாம்பேயில் ’ஆதிபுருஷ்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் இது நடந்தது. அன்றைய தினம் என்னுடைய Cheat Mealக்கான நாள். இயக்குநர் ஓம் ராவத், உங்களுக்கு ஸ்பெஷலாக சென்னை சாப்பாடு ஏற்பாடு செய்கிறோம், அதுவரை எதுவும் சாப்பிடக்கூடாது என சொல்லிவிட்டார். ’சரி’ என நானும் காத்திருந்தேன் நேரம் போய்க் கொண்டே இருந்தது. ஆனால், சாப்பாடு வரவில்லை. நான் போய் அவரிடம் கேட்டால், ’பொறுங்கள் சென்னையிலிருந்து வரவேண்டாமா’ என்றார், நான் அதிர்ச்சியாகிவிட்டேன்.
சென்னை உணவு கிடைக்கும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு என நினைத்தால், ’சென்னையிலிருந்தே சாப்பாடா, நீங்க சாதாரண ஆள் கிடையாது. ஓம்’ எனக் கூறினேன். பின்னர் `சென்னை' சாப்பாடு ஃபிளைட்டில் பறந்து வந்தது. பிரியாணி, ஆப்பம், இடியாப்பம், பாயா என திருப்தியாக சாப்பிட்டேன். இவை எல்லாம் இங்கும் கிடைக்கும் என்றாலும், அவர்கள் செய்யும் ஃப்ளேவர் வித்தியாசமாக இருக்கும். பிரியாணியில் கொஞ்சம் தக்காளி ஃப்ளேவர் போன்ற விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அதன் பின்னர் அடிக்கடி பிற மாநில உணவுகளை Cheat Mealக்கான நாளன்று ஆடர் செய்து சாப்பிடுவேன்" என்றார்.