சினிமா

விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிய சிம்பு

விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிய சிம்பு

webteam

நடிகர் சிம்பு தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டி விட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய்சேதுபதி என பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். திரை உலகம் கடைப்பிடித்து வந்த வேலை நிறுத்தத்தால் ஒரு மாதக் காலம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தடைப்பட்டன. இப்போது வேலை நிறுத்தம் நீங்கி மீண்டும் சகஜ நிலை திரும்பியுள்ளது. ஆகவே மணி ரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்புகள் மறுபடியும் வேகம் எடுத்துள்ளன. இதன் படப்பிடிப்பில் நடிகர்கள் சிம்பு, விஜய்சேதுபதி கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது உணவு இடைவேளையின் போது தன் கையினால் சிம்பு விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டி விட்டார். அந்தப் படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. அதைக் கண்ட இருவரின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.